lingusamy

Advertisment

இயக்குநர் லிங்குசாமி இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் 'சண்டக்கோழி 2'. விமர்சன ரீதியாக கடும் பின்னடைவைச் சந்தித்த இப்படம், வசூல் ரீதியாகவும் வெற்றிபெறத் தவறியது. இப்படம் வெளியாகி இரண்டு வருடங்கள் நிறைவடைந்த பின்னும், இயக்குநர் லிங்குசாமியின் அடுத்தப் படம் குறித்த அப்டேட் வெளியாகாமல் இருந்தது. சிலமுறை ரசிகர்களும் இதுகுறித்து சமூக வலைதளங்களில் விவாதித்துள்ளனர்.

இந்த நிலையில், இயக்குநர் லிங்குசாமியின் அடுத்தப் படம் குறித்த அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, லிங்குசாமியின் அடுத்தப் படத்தில் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரில் ஒருவரான ராம் பொத்தினேனி நடிக்க உள்ளார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் இப்படத்தை ஸ்ரீனிவாசா சிட்டூரி தயாரிக்க உள்ளார். பிற நடிகர், நடிகை மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த கூடுதல் விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.