Advertisment

“எனக்கு வீடு இல்லாமல் இருக்கலாம், ஆனால்...” - மேடையில் அழுத லிங்குசாமி

Lingusamy Emotional Warrior movie Pre Release Event

லிங்குசாமி இயக்கத்தில் பிரபல தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி, கீர்த்தி ஷெட்டி, ஆதி, நதியா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள தி வாரியர் திரைப்படம் ஜூலை 14 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு அண்மையில் நடைபெற்றது.இதில் இயக்குநர்லிங்குசாமி, உள்ளிட்ட படக்குழுவினருடன் இயக்குநர்கள், பாரதிராஜா, மணிரத்னம், ஷங்கர், நடிகர் விஷால் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

Advertisment

இவ்விழாவில் பேசிய இயக்குநர்லிங்குசாமி, “நிறைய பேரை அடிக்கடி மிஸ் பண்றேன். ரெண்டு கண்ணு இருக்கறதுனால கண்ணீர் ரெண்டு கண்ணிலிருந்து மட்டும் வருகிறது. எனக்கு உடம்பு மொத்தம் கண் இருந்தால் அனைத்திலும் கண்ணீர் வரும். ராம் சார் பணத்தை மூலையில் இருந்து சம்பாதிக்கணும், மனிதர்களை மனதில் இருந்து சம்பாதிக்கணும் என்றார். அந்த வகையில் நான் நிறைய மனிதர்களை மனதிலிருந்துசம்பாதித்திருக்கிறேன். இந்த விழாவிற்கு ஷங்கர் சார், மணிரத்னம் சார், பாரதிராஜா சார் எல்லாம் வந்துருக்காங்க. ஒரு காலத்தில்சினிமாவில் வாய்ப்பு தேடி இவர்களில் வாசலில் போய் நின்றேன். ஆனால் இப்போது அவர்கள் இன்று எனக்கு துணையாக வந்து நிற்கிறார்கள். இதை விட மிக பெரிய வெற்றி வேறு என்ன இருக்கிறது. இன்று எங்க அம்மாவை கூட்டிட்டு வரலாம் என்று இருந்தேன் ஆனால் உடல் நிலையில் சரியில்லாததால் கடைசி நேரத்தில் வரமுடியாமல் போனது. ஒரு வேலை அவர்கள் இங்கு வந்து பார்த்திருந்தால் மிக சரியான பிள்ளையைபெற்றிருக்கிறேன்என்று நினைத்து ரொம்ப பெருமைப்பட்டிருப்பார் என்று அழுத படி கூறினார்.

Advertisment

இதனைதொடர்ந்து அழுதுகொண்டே பேசிய லிங்குசாமி, “எனக்கு வீடு இல்லாமல் இருக்கலாம், அலுவலகம் இல்லாமல்இருக்கலாம், கார் இல்லாமல் இருக்கலாம். ஆனால் நான் சம்பாதித்த மனிதர்கள், நண்பர்கள் எனது வாழ்க்கை முழுவதும் கூட இருப்பார்கள். அதுதான்எனது வெற்றி. ஊரிலிருந்துஇங்கு நான் எதையும் எடுத்து வரவில்லை, நான் மட்டும் தான் வந்தேன், இது போன்ற மனிதர்கள் சம்பாதிப்பதுதான் எனது குறிக்கோள்” என்றார்

பல வெற்றிப் படங்களைதயாரித்து கோலிவுட்டில் முன்னணி தயாரிப்பு நிறுவனமான இயக்குநர் லிங்குசாமியின் திருப்பதி பிக்சர்ஸ் கடந்த சில ஆண்டுகளாக தயாரித்த படங்கள் எதுவும் சரிவர வரவேற்பை பெறவில்லை. அதனால் லிங்குசாமி பெரும் இழப்பை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

maniratnam krithi shetty ram pothineni directorlingusamy
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe