Advertisment

"நாம் இப்போது இதை கொண்டாடக் கூடிய மனநிலையில் இல்லை" - லிங்குசாமி கவலை!

gdgsdgsd

Advertisment

மம்மூட்டி நடிப்பில் கடந்த 2001ஆம் ஆண்டு வெளியான 'ஆனந்தம்' படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு இயக்குநராக அறிமுகமானார் இயக்குநர் லிங்குசாமி. இதையடுத்து அவர் இயக்கத்தில் வெளியான ‘ரன்’, ‘சண்டக்கோழி’, ‘பையா’ உள்ளிட்ட படங்கள் ப்ளாக்பஸ்டர் ஹிட்டடித்ததையடுத்து, முன்னனி இயக்குநர்களில் ஒருவரானார்லிங்குசாமி. இந்நிலையில், லிங்குசாமி சினிமாவுக்கு வந்து இன்றுடன் (26.05.2021) 20 வருடங்கள் நிறைவடைந்துள்ளது. இதற்கு பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்துவரும் நிலையில், தன் இருபது வருட சினிமா அனுபவம் குறித்து லிங்குசாமி சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில்...

"இந்த 20 ஆண்டுகளில் என்னை ஆதரித்த எனது தொழில்நுட்ப வல்லுநர்கள், கலைஞர்கள், நண்பர்கள், குடும்பத்தினர் அனைவரும் மற்றும் முக்கியமாக ஆர்.பி. சௌத்ரி சாருக்கு நன்றிகள்!. நாம் இப்போது இதைக் கொண்டாடக் கூடிய மனநிலையில் இல்லை. அனைவருக்காகவும் முதலில் பிரார்த்தனை செய்வோம். இந்தத் தொற்று நோயிலிருந்து விரைவில் நம் அருகில் இருப்பவர்கள் மீள்வதே உண்மையான 'ஆனந்தம்' நமக்கு. உங்கள் எல்லா வாழ்த்துகளுக்கும் நன்றி. பாதுகாப்பாக இருங்கள். முக்கியமாக ஊடக நண்பர்களுக்கும், அவர்களின் ஆதரவுக்கும் ஒரு சிறப்பு நன்றி" என கூறியுள்ளார்.

directorlingusamy
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe