Advertisment

இயக்குநர் லிங்குசாமி படத்தின் ஷூட்டிங் தேதி அறிவிப்பு!

tegegege

இயக்குநர் லிங்குசாமி இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் 'சண்டக்கோழி 2'. விமர்சன ரீதியாகக் கடும் பின்னடைவைச் சந்தித்த இப்படம், வசூல் ரீதியாகவும் வெற்றிபெறத் தவறியது. இப்படம் வெளியாகி இரண்டு வருடங்கள் நிறைவடைந்த பின்னும், இயக்குநர் லிங்குசாமியின் அடுத்த படம் குறித்த அப்டேட் வெளியாகாமல் இருந்தது. இந்த நிலையில், தனது அடுத்த படத்தின் பணிகளை சமீபத்தில் பூஜையுடன் தொடங்கினார் இயக்குநர் லிங்குசாமி.

Advertisment

தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகும் இப்படத்தில் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ராம் பொத்தினேனி நாயகனாக நடிக்க உள்ளார். ஸ்ரீனிவாசா சிட்டூரி தயாரிக்கும் இப்படத்தில் பங்குபெறும் பிற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த கூடுதல் விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூலை 12ஆம் தேதி துவங்கவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத் நகரில் நடக்கிறது. படத்தின் மிக முக்கியமான காட்சிகள் இங்கு படமாக்கப்படவுள்ளன. ‘திரிஷ்யம்’, ‘லூசிஃபர்’ படங்களின் ஒளிப்பதிவாளர் சுஜித் வாசுதேவ் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய, ‘கே.ஜி.எஃப்’ படத்திற்கு ஆக்சன் காட்சிகளை வடிவமைத்த அன்பறிவு மாஸ்டர் இப்படத்திற்கு ஆக்சன் காட்சிகளை அமைக்கின்றனர். தெலுங்கு பதிப்பிற்கு சாய் மாதவ் புர்ரா மற்றும் தமிழ் பதிப்பிற்கு எழுத்தாளர் பிருந்தா சாரதி வசனம் எழுதுகின்றனர். கீர்த்தி ஷெட்டி நாயகியாக நடிக்கும் இப்படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.

directorlingusamy
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe