Skip to main content

"இதே வீட்டில் இரவெல்லாம் பேசினோம்!" - மகேந்திரன் குறித்து நெகிழ்ச்சி நினைவுகள்

Published on 03/04/2019 | Edited on 03/04/2019

தமிழ் திரையுலகுக்கு பெருமை சேர்த்த இயக்குனர்களில் முக்கியமானவரான இயக்குனர் மகேந்திரன் நேற்று காலமானார். இவர் குறித்து இயக்குனர் லிங்குசாமியும் கவிஞர் அறிவுமதியும் தங்கள் நினைவுகளை பகிர்ந்தனர்.

லிங்குசாமி 

 

lingusamy



"மேற்குவங்கத்துக்கு ஒரு சத்யஜித்ரே கிடைத்தது போல நமக்குக் கிடைத்தவர் மகேந்திரன் சார். என்னுடைய ஆனந்தம் படத்தில் கொஞ்சமாவது ஒரு இயல்புத்தன்மை இருந்தது என்றால் அதற்குக் காரணம் அவரது படங்கள்தான். உதிரிப்பூக்கள், முள்ளும் மலரும் இரண்டும் எனக்கு மிகவும் பிடித்த படங்கள். இதே வீட்டில் என்னை அழைத்து  மணிக்கணக்காக இரவு உணவு ரெடி பண்ணி இரவெல்லாம் சினிமா குறித்து பேசியிருக்கிறார். அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்."



அறிவுமதி

 

arivumathy



"என் நண்பர் தசரதனால் அவருக்கு இன்னொரு பிள்ளையாக நான் அறிமுகமானேன். மகேந்திரன் அவர்கள், ஒரு உரையாடல் ஆசிரியராக 'வாழ்ந்து காட்டுகிறேன்' போன்ற படங்களில் பக்கம் பக்கமாக எழுதிய வசனங்களுக்கு கைதட்டல் பெற்றவர். அவரே இயக்குனரான போது, அத்தனை பக்கங்களையும் சுண்டக் காய்ச்சி, வெகு சில பக்கங்கள் மட்டுமே வசனம் எழுதி காட்சியில் கவர்ந்தவர். 'உதிரிப் பூக்கள்' படத்தில் கணவன் திரைப்படத்துக்கு அழைக்கும்பொழுது மனைவி வானத்தைப் பார்க்கும் காட்சி அரங்கில் உள்ள அனைவரையும் கைதட்ட வைத்தது. நம் தமிழ்நாட்டின் மிருனாள் சென் போன்ற சிறந்த இயக்குனரை இழந்து தவிக்கிறோம். என் தலைவன் பிரபாகரன் இவரை அழைத்து உரையாடி மரியாதை செய்தார். அந்த நினைவும் எனக்குள் இன்னும் இருக்கிறது."

 

 

       

சார்ந்த செய்திகள்

Next Story

“சினிமாவை நினைத்து பயந்துவிட்டேன்” - மகேந்திரன்

Published on 11/03/2024 | Edited on 11/03/2024
mahendran movie press meet

முரளி ஶ்ரீனிவாசன் தயாரிப்பில், பிரசாந்த் நாகராஜன் இயக்கத்தில் மாஸ்டர் மகேந்திரன் முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் ‘அமீகோ கேரேஜ்’. இதில் சுந்தர், தசரதி, அதிரா ராஜ், ஶ்ரீக்கோ உதயா, முரளிதரன் சந்திரன், மதன் கோபால், சக்தி கோபால், முரளி கமல் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். பாலமுரளி பாலு இசையமைத்துள்ளார். இப்படம் வரும் மார்ச் 15 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.

இந்நிகழ்வினில் மகேந்திரன் பேசியதாவது, “நான் என்றும் ஹீரோ இல்லை உங்கள் வீட்டுப் பையன் தான். இந்த 30 வருடத்தில் எனக்கு எப்போதும் உங்கள் ஆதரவு தந்து கொண்டே இருக்கிறீர்கள் அதற்கு நன்றி. கொரோனா காலத்தில் சினிமாவை நினைத்து பயந்துவிட்டேன். என்ன செய்யப்போகிறேன் என்ற பயம் வந்தது. அந்த நேரத்தில் தான் இயக்குநர் பிரசாந்த் வந்தார். முதலில் டாக்குமெண்ட்ரி எடுக்கணும் என்றார், நான் தான் படமெடுக்கலாம் என சொன்னேன். சரி என்றார். அவர் அப்பா புரடியூசராக வந்தார். பல நண்பர்களும், அவர் குடும்பத்தினரும் இணைந்து தயாரிக்க முன்வந்தனர். பல கஷ்டங்களுக்கு பிறகு, இப்படத்தை உருவாக்கியுள்ளோம். இங்கிருக்கும் எல்லோருமே பணத்திற்காக வேலை செய்யவில்லை. இந்தப் படத்திற்காக அர்ப்பணிப்போடு உழைத்துள்ளனர். இப்படத்தைப் பார்த்து உங்கள் ஆதரவை தாருங்கள்” என்றார்.

இயக்குநர் பிரசாந்த் நாகராஜன் பேசியதாவது, “இது என் முதல் குழந்தை, என் முதல் படம். முதல் படம் எத்தனை முக்கியம் என அனைவருக்கும் தெரியும். பல கஷ்டங்களுக்கு பிறகு தான் இப்படத்தைத் திரைக்குக் கொண்டு வந்துள்ளோம். ஒரு கதை எழுதிவிட்டு காத்திருந்தபோது, மகேந்திரன் அண்ணாவைச் சந்தித்தேன் அங்கு தான் இப்படம் ஆரம்பித்தது. இப்படத்திற்காக பல தயாரிப்பாளர்களைச் சந்தித்தோம், ஆனால் எதுவும் சரியாக அமையவில்லை. அப்புறம் பல நண்பர்கள் சேர்ந்து தயாரிக்கலாம் என்றார்கள். பலரும் இணைந்து தான் இப்படத்தைத் தயாரித்துள்ளனர். மகேந்திரன் ஒரு நடிகராக இல்லாமல், தன் படமாக இன்று வரை தாங்கி வருகிறார். ஜி.எம். சுந்தர் அண்ணா மிக முக்கியமான பாத்திரம் செய்துள்ளார். கமல் சார் போன்ற மிகப்பெரிய ஜாம்பவான்களுடன் நடித்தவர் அவர். ஷூட்டிங்கில் அவரிடம் எனக்குத் தேவையானதை எப்படி வாங்குவது என்ற தயக்கம் இருந்தது, ஆனால் என்னிடம் மிக எளிமையாகப் பழகி, படத்திற்கு தேவையானதைத் தந்தார்” என்றார்.

Next Story

“ஆக்‌ஷன் ஹீரோவாக என்னை உருவாக்கிய படம்” - விஷால் நெகிழ்ச்சி

Published on 16/12/2023 | Edited on 16/12/2023
vishal about 18 years of sandakozhi

லிங்குசாமி இயக்கத்தில் விஷால், மீரா ஜாஸ்மின், ராஜ்கிரண் உள்ளிட்ட பலர் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளியான படம் சண்டக்கோழி. விக்ரம் கிருஷ்ணா தயாரித்திருந்த இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். பாடல்களைத் தாண்டி படத்தின் பிண்ணனி இசை இன்றளவும் பேசப்படுகிறது. மேலும் விஷால் கரியரில் ஒரு சூப்பர் ஹிட் படமாக அமைந்தது. 

இப்படம் வெளியாகி இன்றுடன் 18 ஆண்டுகள் கடக்கிறது. இதை முன்னிட்டு விஷால் அவரது எக்ஸ் பக்கத்தில், “18 ஆண்டுகளுக்கு முன்பு டிசம்பர் 16, 2005 அன்று வெள்ளித்திரையில் சண்டக்கோழி என்ற மாயாஜாலத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஆக்‌ஷன் ஹீரோவாக என் வாழ்க்கையை உருவாக்கிய இந்த நாளில் நான் அனுபவிக்கும் உணர்வுகள் மற்றும் உணர்ச்சிகளை வார்த்தைகளால் சொல்ல முடியாது. 

என்னை நம்பிய என் பெற்றோர், என் இயக்குநர் லிங்கு (சாமி), அவர்களின் வரிசையில் மேலே உள்ள கடவுளுக்கும் (சாமி) நான் வணங்கி நன்றி கூறுகிறேன். இறுதியாக உலகளவில் பார்வையாளர்கள் வடிவில் திரையரங்குகளில் நான் பார்க்கும் கடவுளுக்கு நன்றி. உங்கள் அனைவருக்கும் எப்போதும் கடமைப்பட்டுள்ளேன். எனது தந்தை ஜி.கே.ரெட்டி மற்றும் எனது குரு அர்ஜுன் சார் ஆகியோரின் இந்த கனவை தொடருவேன். நன்றி மட்டும் போதாது என்பது எனக்குத் தெரியும்” என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். விஷால் தற்போது ஹரி இயக்கத்தில் ரத்னம் படத்தில் நடித்து வருகிறார்.