/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/90_45.jpg)
கெளதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் நீண்ட காலமாக உருவாகி வரும் படம் 'துருவ நட்சத்திரம்'. இப்படத்தில் ரிது வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ், பார்த்திபன், சிம்ரன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். கெளதம் மேனன் நிறுவனம் மற்றும் இரண்டு நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் 90 சதவிகித படப்பிடிப்பு முடிந்த நிலையில் சில பிரச்சனைகள் காரணமாக கடந்த 2017 ஆம் ஆண்டு இப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. கிட்டத்தட்ட 5 ஆண்டுகள் ஆகியும் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படாமல் இருந்தது.
இதனைத் தொடர்ந்து மீண்டும் இப்படத்தின் மீதம் உள்ள படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருவதாக சில மாதங்களுக்கு முன்பு தகவல் வெளியாகியிருந்தது. அதை உறுதிப்படுத்தும் விதமாக படக்குழு சமீபத்தில் ஒரு போஸ்டரை வெளியிட்டிருந்தது. பின்பு படத்தின் பின்னணி இசை கோர்க்கும் பணிகள் தொடங்கியதாகவும் விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என்றும் ஹாரிஸ் ஜெயராஜ் தெரிவித்தார்.
இந்நிலையில் இப்படம் குறித்து லிங்குசாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் (ட்விட்டர்) பதிவில், "துருவ நட்சத்திரத்தின் பாடல்களையும் சில காட்சிகளையும் பார்க்க நேர்ந்தது. காக்க காக்க, வேட்டையாடு விளையாடு படங்களுக்கு பிறகு கவுதம் மேனன் - ஹாரிஸ் ஜெயராஜ் கூட்டணியின் மேஜிக்கை திரையில் பார்க்க ஆவலாக இருக்கிறது. இப்படம் திரைக்கு வரும் போது அதே தாக்கத்தை அனைவரிடத்திலும் ஏற்படுத்தும் என நம்புகிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)