பல மொழி திரைப்படங்களுக்கு படத் தொகுப்பு மேற்கொண்டதற்காக ‘லிம்கா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்’ புத்தகத்தில் இடம்பிடித்தார் புகழ்பெற்ற எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத்.

இதுவரை தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஒடியா, பெங்காலி, அஸ்ஸாமி, பஞ்சாபி, நேப்பாலி, மராத்தி, சிங்களம், கர்பி, மிஷிங், போடோ மற்றும் பங்சென்பா ஆகிய 17 மொழிகளில் ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு மேற்கொண்டுள்ளார். இதை கௌரவப்படுத்தும் விதமாக லிம்கா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் அவரது பெயரை சேர்த்திருக்கிறது.
லிம்கா அனுப்பிய சான்றிதழை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து ஸ்ரீகர் பிரசாத் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். இந்தியாசின் தலைசிறந்த சினிமா வல்லுநர்களில் இவரும் ஒருவர், 8 தேசிய விருதுகளை பெற்றிருக்கிறார். தற்போது மணிரத்னத்தின் கனவு படமான பொன்னியின் செல்வன் படத்தின் படத்தொகுப்பாளராக ஸ்ரீகர் பிரசாத் பணி புரிந்து வருகிறார். மேலும் பல படங்களில் ஸ்ரீகர் பிரசாத் எடிட்டராக பணிபுரிவதுகுறிப்பிடத்தக்கது.