aga

Advertisment

பூரி ஜெகன்நாத் இயக்கத்தில், விஜய் தேவரகொண்டா நடிக்கும் 'லைகர்' படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பிற்குரிய படமாக இருந்து வருகிறது. பூரி கனெக்ட்ஸ் நிறுவனம் பாலிவுட்டின் முன்னணி நிறுவனமான தர்மா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் அடுத்தகட்டபடப்பிடிப்பு பணிகள் தற்போது துவங்கி நடைபெற்று வருகிறது. பொழுதுபோக்கு ஆக்சன் திரைப்படமாக உருவாகும் 'லைகர்' படம், வரும் செப்டம்பர் 9 அன்று வெளியாகிறது. இப்படத்தில் விஜய் தேவரகொண்டா முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் தோன்றுவதோடு, இப்படத்திற்காக மார்ஷியல் ஆர்ட்ஸ் பயிற்சியும் மேற்கொண்டுள்ளார்.

மேலும் இயக்குநர் பூரி ஜெகன்நாத் இப்படத்தில் விஜய் தேவரகொண்டாவை மிகவும் வித்தியாசமான, இதுவரை கண்டிராத தோற்றத்தில் காட்டியுள்ளார். பாலிவுட் நடிகை அனன்யா பாண்டே இப்படத்தின் நாயகியாக நடிக்கிறார். பூரி ஜெகன்நாத், கரண் ஜோகர், சார்மி கவுர், அபூர்வா மேத்தா இணைந்து இப்படத்தினை தயாரிக்கிறார்கள். ரம்யா கிருஷ்ணன் முக்கியக்கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படம் இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் மொழிகளில் வெளியாகவுள்ளது.