பூரி ஜெகன்நாத் இயக்கத்தில், விஜய் தேவரகொண்டா நடிக்கும் 'லைகர்' படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்புக்குரிய படமாக இருந்துவருகிறது. பூரி கனெக்ட்ஸ் நிறுவனம் பாலிவுட்டின் முன்னணி நிறுவனமான தர்மா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து 'லைகர்' படத்தைத் தயாரிக்கிறது. இதில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக அனன்யா பாண்டே நடிக்கிறார். பிரபல குத்துச்சண்டை வீரர்மைக் டைசன்முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும்இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.
சமீபத்தில் ‘லைகர்’ படக்குழுபடப்பிடிப்பிற்காக அமெரிக்கா சென்ற நிலையில், அங்கு விஜய் தேவரகொண்டா மற்றும் மைக் டைசன் சம்பந்தப்பட்ட சண்டை காட்சிகளைப் படமாக்கிவருகிறது.இந்நிலையில், படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் படக்குழு வெளியிட்டு, "லெஜண்ட்vsலைகர்" எனக் குறிப்பிட்டுள்ளது. தற்போது இந்தப் புகைப்படம் சமூகவலைதளத்தில் வைரலாகிவருகிறது.
And then they met- face to face!
Absolute fire ?
The Legend vs Liger ??#Liger#USAscheduleBegins ?@MikeTyson@TheDeverakonda#PuriJagannadh@karanjohar@ananyapandayy@Charmmeofficial@apoorvamehta18@DharmaMovies@PuriConnects@IamVishuReddypic.twitter.com/vjSfRhrwgt
— Puri Connects (@PuriConnects) November 16, 2021