Advertisment

மிரட்டும் மைக் டைசன்... புதிய போஸ்டரை வெளியிட்ட 'லைகர்' படக்குழு! 

liger movie mike tyson new poster released

பூரி ஜெகன்நாத் இயக்கத்தில், விஜய் தேவரகொண்டா நடிக்கும் 'லைகர்' படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்புக்குரிய படமாக இருந்துவருகிறது. பூரி கனெக்ட்ஸ் நிறுவனம் பாலிவுட்டின் முன்னணி நிறுவனமான தர்மா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து 'லைகர்' படத்தை தயாரிக்கிறது. இதில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக அனன்யா பாண்டே நடிக்கிறார். பிரபல குத்துச்சண்டை வீரர்மைக் டைசன் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். விஜய் தேவரகொண்டா முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் இருக்கும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

Advertisment

இயக்குநர் பூரி ஜெகன்நாத் இப்படத்தில் விஜய் தேவரகொண்டாவை மிகவும் வித்தியாசமான, இதுவரை கண்டிராத தோற்றத்தில் காட்டியுள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.

Advertisment

இந்நிலையில் தீபாவளி தினத்தை முன்னிட்டு நேற்று (4.11.2021) 'லைகர்'படத்தின் புதிய போஸ்டரைபடக்குழு வெளியிட்டுள்ளது. அதில், மாஸான மிரட்டும் தோற்றத்தில் பிரபல குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் தோன்றியுள்ளார். தற்போது இந்தப் போஸ்டர் இணையத்தில் வைரலாகிவருகிறது.

mike tyson vijay devarakonda liger
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe