/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/EysgYNwUUAEXcC4.jpg)
விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘சரவணன் மீனாட்சி’ சீரியலில் நடித்ததன் மூலம் பிரபலமடைந்த கவின், ‘நட்புன்னா என்னனு தெரியுமா’ என்ற படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். இப்படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனைத் தொடர்ந்து, கவின் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘லிஃப்ட்’. இப்படத்தில் கவினுக்கு ஜோடியாக அம்ரிதா ஐயர் நடிக்கிறார்.வினீத் வரப்பிரசாத் இயக்க, ஈகா என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது.
இப்படத்தின் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், படத்தின் தமிழ்நாடு விற்பனை உரிமை குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, ‘லிஃப்ட்’ படத்தின் தமிழ்நாடு திரையரங்க உரிமையை லிப்ரா ப்ரொடக்சன்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. படத்தை விரைவில் திரைக்கு கொண்டுவரத் திட்டமிட்டுள்ள தயாரிப்பு தரப்பு, தற்போது படத்தின் விநியோக உரிமை விற்பனையில் முழு கவனம் செலுத்தி வருகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)