Life is like a roller coaster - meena post

நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் சமீபத்தில் உயிரிழந்தார். இவரின் மறைவு திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. தற்போது மெல்ல தேறி வரும் மீனா மீண்டும் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்க ஆரம்பித்துள்ளார். சமீபத்தில் கூட தனது உடல் உறுப்புகளை தானம் செய்ய முடிவு எடுத்துள்ளேன் என அறிவித்திருந்தார்.

Advertisment

அந்த வகையில் தற்போது மீனா வாழ்க்கை குறித்து ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக தனது சமூக வலைத்தள பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "வாழ்க்கை ஒரு ரோலர் கோஸ்டர் போன்றது. வாழுங்கள். நம்மிடம் இருப்பது இந்த நிமிடம் மட்டுமே" எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் தன் சிறு வயதிலிருந்து லேட்டஸ்ட்டாக எடுத்த புகைப்படங்கள் வரை ஒரு வீடியோவாக வெளியிட்டுள்ளார் மீனா.

Advertisment