சின்னத்திரையில் வேட்டையன் என்ற பெயரில் கொடி கட்டி பறந்த கவின் முதன் முதலாக வெள்ளித்திரையில் ஹீரோவாக அறிமுகமான படம் ‘நட்புனா என்னானு தெரியுமா’. இத்திரைப்படம் கடந்த ஒரு வருடமாக திரைக்கு வருவதாக காத்திருந்து, கடந்த 17ஆம் தேதிதான் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. குறைந்த அளவிலான திரைகளில் வெளியான இப்படம், ரசிகர்களிடம் பெற்ற வரவேற்புக்கு பின்னர் திரைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. ரம்யா நம்பீசன், அருண்ராஜா காமராஜ், ராஜூ உள்ளிட்டவர்களும் இப்படத்தில் நடித்துள்ளனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/raveendran.jpg)
இந்நிலையில் இந்தப் படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா சென்னை கிரீன் பார்க் ஓட்டலில் நடைபெற்றது. அப்போது பேசிய படத்தின் தயாரிப்பாளர் ரவீந்திரன்,“இந்தப் படத்தை வெளியிடவே முடியாது எனக்கூறியவர்கள் தான் அதிகம். வெளியிட முடியும் என்று நம்பிய ஒரே ஆள் என் அம்மா தான்.
தற்போது படத்துக்கு ஊடகங்கள் கொடுத்த வரவேற்பால்தான் பல திரையரங்குகளில் காட்சிகளை அதிகரித்துள்ளனர். புது ஹீரோ தான் வேண்டுமென்று படம் எடுத்தால் எனக்கு இங்கு படம் காட்டுகிறார்கள். ஒரு படம் வெற்றி பெறுவதற்கு ஹீரோ தான் முக்கியம் என்கிறார்கள். அப்படி படம் எடுக்கவில்லை என்றால் நான் மீண்டும் தோற்றுப் போவேன் என்கிறார்கள். ஒரு நாள் இல்லை ஒரு நாள் தோற்று தோற்று மிகப்பெரிய தயாரிபாளராய் வருவேன்” என்று கூறினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)