Advertisment

“எனக்கு யாரும் ஆதரவாக இல்லை” - நடிகையின் தற்கொலை வழக்கில் சிக்கிய கடிதம்

letter involved vaaitha film actress powlen jessica deepa case

சென்னைவிருகம்பாக்கம்பகுதியில் வசித்து வந்தவர் நடிகைபவுலின்எனும் தீபா. இவர் அதே பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பில் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று(18.9.2022) காலை அவரது உறவினர்கள் அவரைசெல்போன்மூலம் தொடர்பு கொள்ளமுயற்சித்த போதுஅவர்செல்போன்எடுக்கவில்லைஎனகூறப்படுகிறது. இதனால் உடனடியாக அவரதுநண்பரைதொடர்பு கொண்டு இந்தவிஷயத்தைசொல்லி நேரில் சென்றுபார்க்கசொன்னதாகவும் சொல்லப்படுகிறது.

Advertisment

அப்படிதீபாவின்நண்பர் அவரதுவீட்டிற்குசென்று பார்த்தபோது, அவர் தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருந்தது தெரியவந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர்,தீபாவின்உறவினர்களுக்குதகவல் தெரிவித்துள்ளார். மேலும், காவல்நிலையத்திற்கும் தகவல் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து அங்கு வந்த காவல்துறையினர் அவரது உடலை மீட்டு பிரேதப்பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு, வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் இவரதுதற்கொலைக்குகாதல் விவகாரம் காரணம்எனதெரிவிக்கின்றனர்.

Advertisment

இதனைத் தொடர்ந்து நடிகை தீபாவின்அறையை போலீசார் சோதனை செய்த போது, அவர் எழுதிவைத்ததாக சொல்லப்படும் கடிதம் ஒன்று சிக்கி உள்ளது. அதில், “நான் ஒருவரைக் காதலித்தேன். ஆனால், அவர் எனது காதலை ஏற்றுக்கொள்ளவில்லை. எனக்கு யாரும் ஆதரவாக இல்லை. இதனால், இந்த உலகில் வாழ விரும்பவில்லை” என்று குறிப்பிட்டு இருந்ததாக போலீஸார் தெரிவித்தனர். மேலும் போதிய பட வாய்ப்புகளும்கிடைக்கவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளதாககூறப்படுகிறது. இந்த கடிதத்தின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Actress tamil cinema
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe