Advertisment

பள்ளி புத்தகத்தில் தமன்னா குறித்து பாடம்; கொந்தளித்த பெற்றோர்!

A lesson on Tamannaah in the school curriculum in bangalore

தமிழில் வெளிவந்த கேடி படத்தின் மூலம் அறிமுகமான தமன்னா, 15 ஆண்டுகளுக்கு மேல் திரைத்துறையில் நடித்து வருகிறார். தமிழ் மட்டுமல்லாமது தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற அரண்மனை 4 படத்தில் நடித்திருந்தார். இயக்குநர் சுந்தர்.சி இயக்கியிருந்த இப்படம் உலகம் முழுவதும் ரூ.100 கோடியைக் கடந்து வசூல் செய்துள்ளதாகத்தெரிவிக்கப்பட்டது.

Advertisment

இந்த நிலையில், தமன்னாவைப் பற்றி பள்ளி பாடப்புத்தக்கத்தில் சேர்க்கப்பட்ட விவகாரம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலம், பெங்களூர் ஹெப்பால் பகுதியில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்தப் பள்ளியில் 7ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் சிந்தி மக்களின் வாழ்க்கை என்ற தலைப்பின் கீழ் தமன்னாவைப் பற்றிய வாழ்க்கை குறிப்புகள் இடம்பெற்றுள்ளது.

Advertisment

இந்த விவகாரம் மாணவர்களின் பெற்றோர்களுக்குத்தெரியவர, இதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும், இது தொடர்பாக கர்நாடகாவில் உள்ள ஆங்கில வழி பள்ளி நிர்வாகத்திடம் புகார் தெரிவிக்கப்பட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். இது குறித்து விசாரணை நடைபெற்று நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

Bangalore EDUCATION OF SCHOOLS Tamanna
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe