Published on 09/01/2019 | Edited on 09/01/2019

யுவன் ஷங்கர் ராஜா தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ஒய்.எஸ்.ஆர். பிலிம்ஸ் மூலம் தயாரித்து, விஜய் சேதுபதி - சீனு ராமசாமி கூட்டணியில் நான்காவது படமாக உருவாகும் ‘மாமனிதன்’ படத்தில் விஜய் சேதுபதி ஆட்டோ டிரைவராக நடிக்கிறார். நாயகியாக காயத்ரி நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இந்த படத்தின் மூலம் பிரபல நடிகரும், பேச்சாளருமான திண்டுக்கல் ஐ.லியோனியின் மகன் லியோ சிவக்குமார் முறைப்படி நடிகர்கள் தேர்வில் பங்குபெற்று நடிகராக சினிமாவில் அறிமுகமாவதாக இயக்குநர் சீனு ராமசாமி தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இளையராஜா, கார்த்திக் ராஜா, யுவன் ஷங்கர் ராஜா என மூன்று பேரும் இணைந்து இப்படத்திற்கு இசையமைக்கின்றனர்.