பருவமழை பொய்த்துவிட்ட நிலையில் தமிழகம் முழுவதும் தண்னீர் பஞ்சமாக உள்ளது. குடிநீரை வழங்கிய ஏரிகள், குளங்கள், கிணறுகளில் பெரும்பாலானவை வறண்டுவிட்டன. இதன்பொருட்டு தலைநகர் சென்னையில் குடிநீர் பற்றாக்குறை பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. பல இடங்களில் மக்கள் தினமும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

Advertisment

sacarcity

குடிநீர் தேவையைச் சமாளிக்க தமிழக அரசு பரிசீலித்து வருகிறது. சென்னையில் உள்ள பெரும்பாலான பகுதிகளில் நிலத்தடி நீர் குறைந்து மக்கள் தண்ணீர் லாரிகளுக்காக காத்திருக்கின்றனர்.

Advertisment

இந்நிலையில் சென்னையின் தண்ணீர் பஞ்சம் குறித்து ஹாலிவுட் நடிகர் லியார்னடோ டிகாப்ரியோ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். அதில், “மழையால் மட்டுமே சென்னையை காப்பாற்ற முடியும். ஒரு கிணறு முற்றிலுமாக வறண்டு இருக்கிறது. இந்தியாவின் தெற்கு நகரமான சென்னை கடுமையான குடிநீா் தட்டுப்பாட்டை சந்தித்துள்ளது. ஏரிகள் வறண்டுவிட்டன.

குடிநீருக்காக மக்கள் காலி குடங்களுடன் அரசு விநியோகிக்கும் தண்ணீருக்காக மணிக் கணக்கில் வரிசையில் காத்திருக்கின்றனா். தண்ணீா் தட்டுப்பாடு காரணமாக உணவகங்கள் மூடப்பட்டுவிட்டன. அரசு அதிகாாிகள் இந்தத் தட்டுப்பாட்டைப் போக்க மாற்று வழிகள் குறித்து ஆய்வு செய்து வருகிறது. சென்னையில் வசிக்கும் பொதுமக்கள் மழைக்காக சிறப்பு பிராா்த்தனைகளில் ஈடுபட்டு வருகின்றனா்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Advertisment

என்னதான் லியோ மிகப்பெரிய நடிகராக இருந்தாலும் இயற்கை சூழலுக்கு நடக்கும் வன்முறைகளுக்கு எதிராக குரல் கொடுப்பவர். ஆஸ்காரில் சிறந்த நடிகருக்கான விருது பெற்றபோதும் கூட அந்த மேடையை மக்களுக்கு பருவநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வைஏற்படுத்தவே பயன்படுத்திக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.