Advertisment

தந்தை இறந்தும் பணியில் கவனம்; இசையமைப்பாளரின் நெகிழ்ச்சி செயல்

leon james father passed away while he mixing dragon movie song

Advertisment

அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகி வரும் படம் ட்ராகன். ஏ.ஜி.எஸ். தயாரிக்கும் இப்படத்தில் கே.எஸ். ரவிக்குமார், கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ள இப்படம் பிப்ரவரி 21ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தில் இருந்து ‘ரைஸ் ஆஃப் டிராகன்...’ மற்றும் ‘வழித்துனையே’ ஆகிய பாடல்கள் வெளியாகியிருந்த நிலையில் மூன்றாவது பாடல் இன்று வெளியிடப்படும் என முன்பு அறிவிக்கப்பட்டது. இப்பாடல் காதல் தோல்வி பாடல் என்றும் சிம்பு இப்பாடலை பாடியுள்ளதாகவும் வெளியான புரொமோ வீடியோ பலரது கவனத்தை ஈர்த்தது.

இந்த நிலையில் மூன்றாவது பாடலான ‘ஏண்டி விட்டு போன’ பாடல் தற்போது வெளியாகியுள்ளது. இந்த நிலையில் பாடல் உருவாக்கத்தின் போது இசையமைப்பாளர் லியோன் ஜேம்ஸின் தந்தை இறந்துவிட்டதாக இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து அவரது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்தப் பதிவில், “நேற்று அதிகாலையில், பாடலின் இறுதி பணிகள் நடந்து கொண்டிருந்தபோது, ​​லியோனின் தந்தை காலமானார். எங்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. பாடல் வெளியீட்டைத் தள்ளிப் போடலாமா என்று லியோனிடம் கேட்டேன். ஆனால் அவர் இல்லை மச்சா, சொன்ன நேரத்திற்கு சரியாக வெளியிடலாம் என்றார். அது என்னை எமோஷ்னலாக்கியது.

லியோன் தனது அறையில் பாடலை மிக்ஸிங் செய்து கொண்டிருந்தார், மேலும் ஹாலில் தனது தந்தையின் இறுதி கடமைகளையும் பார்த்து வந்தார். நேரம், ரசிகர்கள் மற்றும் சினிமாவை நேசிக்கும் சாதாரண பார்வையாளர்களுக்கு அவர் காட்டும் மரியாதை. அவர் ஒரு ஜெம். ‘ஏண்டி விட்டு போன’ பாடலை லியோனின் தந்தைக்கு அர்ப்பணிக்கிறேன்” என்றார்.

Advertisment

Ashwath Marimuthu Pradeep Ranganathan actor simbu Leon James
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe