Advertisment

'என்னை நோக்கி பாயும் கத்தி' - அதிர்ச்சியில் லியோ த்ரிஷா

leo trisha poster released

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா, பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், அர்ஜுன், மன்சூர் அலி கான், பிரியா ஆனந்த் உள்ளிட்ட பல முன்னணி பிரபலங்கள் நடிப்பில் உருவாகியுள்ள படம் லியோ. மேலும் மிஷ்கின், கௌதம் மேனன், சாண்டி மாஸ்டர் என ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளனர்.

Advertisment

இப்படத்தின் 'நா ரெடி...' மற்றும் 'படாஸ்' உள்ளிட்ட பாடல்கள் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. சஞ்சய் தத் மற்றும் அர்ஜுன் ஆகியோரின் கதாபாத்திர அறிமுக வீடியோ அவர்களது பிறந்தநாளில் சர்ப்ரைஸாக வெளியிடப்பட்டது. சமீபத்தில் தெலுங்கு, கன்னடம், தமிழ், இந்தி உள்ளிட்ட மொழிகளின் போஸ்டர்களை படக்குழு வெளியிட்டது.

Advertisment

இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னட மொழிகளில் வருகிற 19 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதையொட்டி முன்பு படத்தின் இசை வெளியீட்டு விழா நடத்த திட்டமிட்டிருந்து பின்பு ரத்தானது. இதற்கு அரசியல் அழுத்தங்களோஅல்லது வேறு காரணங்களோஇல்லை என படக்குழு தெரிவித்தது. இருப்பினும் இது சர்ச்சையானது. அரசியல் காரணங்களால் தான் இசை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதாக சீமான் மற்றும் சமூக வலைத்தளங்களில் சிலர் கருத்து தெரிவித்திருந்தனர்.

அப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. இப்படத்தின் ட்ரைலர் இன்று வெளியாகவுள்ள நிலையில் தொடர்ந்து ஒவ்வொரு கதாபாத்திரத்தின் போஸ்டர்களை படக்குழு வெளியிட்டு வருகிறது. அதன்படி சஞ்சய் தத், அர்ஜுன் ஆகியவற்றை தொடர்ந்து தற்போது த்ரிஷாவின் கதாபாத்திர போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் த்ரிஷாவை நோக்கி கத்தி வருகிறது. ரத்தக்கறையுடன் அந்த பயத்தில் த்ரிஷா அதிர்ச்சியான ரியாக்‌ஷனுடன் காணப்படுகிறார்.

பொதுவாக லோகேஷின் படங்களில் கதாநாயகிகள் ஒரு கட்டத்தில் இறப்பது போல் காட்சி இடம்பெற்று வருகிறது. அந்த வகையில் லியோவின் கதாநாயகியான த்ரிஷாவும் கதைப்படி இறந்துவிடுவாரோ என்ற சந்தேகத்தை கிளப்பியுள்ளது. அதுவும் இதுவரை த்ரிஷாவின் லுக் பற்றி எதுவும் வராமல் இருந்த நிலையில் முதல் முறையாக அவரது கதாபாத்திர போஸ்டர் ரத்தக்கறையுடன் வெளியாகியுள்ளது ரசிகர்களின் சந்தேகத்தை வலுப்படுத்தியுள்ளது. முன்னதாக ஒரு நிகழ்ச்சியில் த்ரிஷாவுக்கு படத்தில் எதுவும் ஆகுமோ என்ற தொனியில் ரசிகர் ஒருவர் லோகேஷ் கனகராஜிடம் கேட்டிருந்தார். அப்படி எதுவும் ஆகாது என்ற ரீதியில் லோகேஷ் பதிலளித்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

actor vijay lokesh kanagaraj trisha
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe