Skip to main content

புகார் எதிரொலி - விஜய் படக்குழு திடீர் முடிவு

Published on 28/06/2023 | Edited on 28/06/2023

 

leo team add disclaimer in naa ready song

 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் 'லியோ'. இப்படத்தில் கதாநாயகியாக திரிஷா நடிக்க பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், அர்ஜுன், மன்சூர் அலி கான், பிரியா ஆனந்த், இயக்குநர்கள் மிஷ்கின், கௌதம் மேனன் என ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடிக்கின்றனர். இப்படம் வருகிற அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாகவுள்ளது. 

 

முதற்கட்ட படப்பிடிப்பை காஷ்மீரில் நடத்தி முடித்த படக்குழு. அடுத்தகட்ட படப்பிடிப்பை சென்னையில் படமாக்கி வருகிறார்கள். விஜய்யின் பிறந்தநாளான கடந்த 22 ஆம் தேதி, இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் முதல் பாடலான ‘நா ரெடி’ பாடலின் லிரிக் வீடியோ வெளியானது. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தற்போதுவரை 33 மில்லியன் பார்வையாளர்களைத் தாண்டி ட்ரெண்டிங்கில் நம்பர் 1 இடத்தில உள்ளது. 

 

அதே சமயம் விஜய் புகைபிடித்துக் கொண்டே பாடல் முழுவதும் நடனமாடியது விமர்சனத்துக்குள்ளானது. மேலும் பாடல் வரிகளில் மதுபானம் போன்றவை இடம்பெற்றிருப்பதாலும் பல தரப்பில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பின. இதனைக் கண்டித்து பாமக  தலைவர் அன்புமணி அறிக்கை வெளியிட்டிருந்தார். 

 

இந்த விவகாரம் தொடர்பாக விஜய் மீது போதைப் பொருள் தடுப்பு சட்டப் பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க காவல் ஆணையரிடம் ஆன்லைன் வாயிலாகப் புகார் அளிக்கப்பட்டது. இது பரபரப்பை கிளப்பிய நிலையில் எதிர்ப்புகளின் எதிரொலியாகத் தற்போது படக்குழு அப்பாடலில் 'புகை பிடித்தல் புற்றுநோய் உண்டாக்கும், உயிரைக் கொல்லும்' என்ற எச்சரிக்கை வாசகத்தை இணைத்துள்ளது. 

 


 

சார்ந்த செய்திகள்