லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் 'லியோ'. இப்படத்தில் கதாநாயகியாக திரிஷா நடிக்க பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், அர்ஜுன், மன்சூர் அலி கான், பிரியா ஆனந்த், இயக்குநர்கள் மிஷ்கின், கௌதம் மேனன் என ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளனர். இப்படம் வருகிற அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
சமீபத்தில் படப்பிடிப்பு அனைத்தும் நிறைவுபெற்றது. முதற்கட்ட படப்பிடிப்பை காஷ்மீரில் நடத்திய படக்குழு, அடுத்தகட்ட படப்பிடிப்புமுழுவதும் சென்னையில் படமாக்கி முடித்துள்ளார். படத்தின் முதல் பாடலான 'நா ரெடி...' பாடல் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இசை வெளியீட்டு விழா செப்டம்பரில் நடக்கவுள்ளதாக அண்மையில் லோகேஷ் கனகராஜ் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இப்படத்தில் நடித்துள்ள சஞ்சய் தத் இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அதனை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்து அவரின் கதாபாத்திர முன்னோட்ட வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. ஆண்டனி தாஸ் என்ற கதாபாத்திரத்தில் அவர் நடித்துள்ளதாகத்தெரிவிக்கப்பட்டுள்ளது.