லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் 'லியோ'. இப்படத்தில் கதாநாயகியாக திரிஷா நடிக்க பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், அர்ஜுன், மன்சூர் அலி கான், பிரியா ஆனந்த், இயக்குநர்கள் மிஷ்கின், கௌதம் மேனன் என ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடிக்கின்றனர். இப்படம் வருகிற அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
முதற்கட்ட படப்பிடிப்பை காஷ்மீரில் நடத்தி முடித்த படக்குழு அடுத்தகட்ட படப்பிடிப்பை சென்னையில் படமாக்கி வருகிறார்கள். அண்மையில் இப்படத்தின் பாடல் காட்சி பிரமாண்டமாகப் படமாக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் முதல் பாடலான ‘நா ரெடி’ பாடல் படக்குழு வெளியிடவுள்ளது.
இந்த நிலையில் முதல் பாடலான நா ரெடி பாடலின் ப்ரொமோ வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. விஷ்ணுஎத்வன் வரிகளில் நடிகர் விஜய் பாடியுள்ளார். மேலும் இந்த பாடலை பாடியவர் உங்கள் விஜய் என்று லோகேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.