Advertisment

லியோ - முதல் நாள் வசூல் விவரத்தை வெளியிட்ட படக்குழு

leo first day collection worldwide

Advertisment

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லலித் தயாரிப்பில் விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், கவுதம் மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் அனிருத் இசையில் உருவாகியுள்ள லியோ படம் நேற்று (19.10.2023) உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியானது. பல்வேறு சர்ச்சைகளைத் தாண்டி இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட சில மொழிகளில் வெளியாகியுள்ளது.

முதல் நாளான நேற்று வழக்கம் போல் திரையரங்கம் முன்பு கூடிய ரசிகர்கள் கேக் வெட்டி, பேனர் வைத்து, மேளதாளத்துடன் நடனமாடி, தேங்காய் உடைத்துக் கொண்டாடி மகிழ்ந்தனர். புதுக்கோட்டையில் ஒரு தம்பதி திரையரங்கினுள் நிச்சயம் செய்துகொண்ட சம்பவம், திருப்பூரில் 20 அடி நீள கேக், காஞ்சிபுரத்தில் பிரியாணி விருந்து என ஏகப்பட்ட சுவாரசிய சம்பவங்களும் நடந்தன.

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. இருப்பினும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. தெலுங்கில் மட்டும் முதல் நாளில் ரூ.16 கோடி வசூலித்துள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது.

Advertisment

இந்நிலையில் முதல் நாள் வசூல் விவரம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி உலகம் முழுவதும் ரூ.148.5 கோடி வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தாண்டில் உலகளவில் அதிக வசூலை ஈட்டிய இந்திய திரைப்படமாக லியோ சாதனை படைத்துள்ளதாகக் கூறியுள்ளது.

lokesh kanagaraj actor vijay
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe