லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், லலித் தயாரிப்பில், விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், கௌதம்மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 19ஆம் தேதி வெளியான படம் லியோ. பல்வேறு சர்ச்சைகளைத் தாண்டி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், வசூல் ரீதியாக பெரும் சாதனை படைத்து வருகிறது.
லியோ படம் வெளியான முதல் நாளில் மட்டும் உலகம் முழுவதும் ரூ.148 கோடி வசூல் செய்து சர்வதேச அளவில் முதல்நாளில் அதிக வசூல் செய்த தமிழ் படம் என்ற சாதனையைப் படைத்தது. வார இறுதிநாள்,ஆயுத பூஜை மற்றும் விஜய தசமி ஆகிய விடுமுறை நாளையொட்டி படம் வெளியானதால் நாளுக்கு நாள் படத்தின் வசூல் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் படம் வெளியான 4 நாட்களில் 400 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்துள்ளதாக கூறப்படுகிறது.