leo fdfs lokesh kanagaraj and anirudh visit vetri theatre in chennai

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லலித் தயாரிப்பில் விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், கவுதம் மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் அனிருத் இசையில் உருவாகியுள்ள லியோ படம் இன்று உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 6000 திரைகளில் பிரம்மாண்டமாக வெளியாகியுள்ளது. பல்வேறு சர்ச்சைகளை தாண்டி இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட சில மொழிகளில் வெளியாகியுள்ளது.

Advertisment

முதல் நாளான இன்று வழக்கம் போல் திரையரங்கம் முன்பு கூடிய ரசிகர்கள் கேக் வெட்டி, பேனர் வைத்து, மேளதாளத்துடன் நடனமாடி கொண்டாடி மகிழ்ந்தனர். கேரளா, ஆந்திர உள்ளிட்ட சில மாநிலங்களில் காலை 4 மணிக்கே சிறப்பு காட்சி தொடங்கப்பட்டது. தமிழகத்தில் தமிழக அரசு உத்தரவின்படி 9 மணிக்கு சிறப்பு காட்சி தொடங்கப்பட்டுள்ளது. சிறப்பு காட்சியில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் திரையரங்கில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Advertisment

ஒவ்வொரு பகுதிகளிலும் வித்தியாசமான முறையில் ரசிகர்கள் படத்தை வரவேற்று வரும் நிலையில் புதுக்கோட்டையில் ஒரு தம்பதி திரையரங்கினுள் நிச்சயம் செய்துகொண்ட சம்பவம் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும் 20 அடி நீள கேக், பிரியாணி விருந்து என கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில் ரசிகர்களுடன் முதல் காட்சியை பார்க்க இயக்குநர்கள் லோகேஷ் கனகராஜ், அனிருத் ஆகியோர் சென்னையில் உள்ள வெற்றி திரையரங்கிற்குவருகை தந்தனர். அப்போது அங்கு கூடியிருந்த ரசிகர்கள் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும் கார்த்திக் சுப்புராஜ் மற்றும் மன்சூர் அலிகான் ஆகியோர் சென்னை வடபழனியில் உள்ள கமலா திரையரங்கிற்கு சென்றுள்ளனர்.