Skip to main content

பழம்பெரும் பின்னணி பாடகி வாணி ஜெயராம் மறைவு - திரையுலகினர் அதிர்ச்சி

Published on 04/02/2023 | Edited on 04/02/2023

 

Legendary playback singer Vani Jayaram passes away

 

பழம்பெரும் பின்னணி பாடகி வாணி ஜெயராம்(78) காலமானார். 1971 ஆம் ஆண்டு திரைத்துறையில் அறிமுகமான இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட 19 மொழிகளில் கிட்டத்தட்ட 10,000க்கும் அதிகமான பாடல்களைப் பாடியுள்ளார். சிறந்த பாடகிக்கான தேசிய விருதையும் பல்வேறு மாநில அரசுகள் விருதுகளையும் வாங்கியுள்ளார். திரைத்துறையில் இவர் ஆற்றிய பணிகளைப் பாராட்டி சமீபத்தில் மத்திய அரசு பத்மபூஷன் விருது அறிவித்தது.

 

இந்த நிலையில், சென்னை நுங்கம்பாக்கத்தில் வசித்து வந்த வாணி ஜெயராம் அவரது இல்லத்தில் நெற்றியில் காயங்களுடன் இறந்து கிடந்ததாகச் சொல்லப்படுகிறது. இதுகுறித்து ஆயிரம் விளக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

இவரது மறைவு திரையுலகினரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இது தொடர்பாக ரசிகர்களும் திரைப் பிரபலங்களும் தற்போது இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ம.தி.மு.க. எம்.பி. கணேசமூர்த்தி காலமானார்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
mdmk MP Ganesamurthy passed away

ம.தி.மு.க. எம்பி கணேசமூர்த்தி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

ஈரோடு பாராளுமன்றத் தொகுதி எம்பியான கணேசமூர்த்தி மதிமுகவின் பொருளாளராகப் பணியாற்றி வந்தார். சென்ற தேர்தலில் ஈரோடு தொகுதி மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டது. அப்போது உதயசூரியன் சின்னத்தில் நிற்க வேண்டிய சூழல் மதிமுகவுக்கு ஏற்பட்டதால் கணேசமூர்த்தி உதயசூரியன் சின்னத்தில் நின்று பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதன் பிறகு கடந்த ஐந்து வருடமாகத் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியைத் தொடர்ந்து மக்களுக்கு பணியாற்றி வந்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை திடீரென ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கணேசமூர்த்தி தீவிர சிகிச்சை பெற்று வந்தார். என்ன காரணம் எனத் தெரியாத சூழலில் இதுகுறித்து விசாரித்தபோது அன்று காலை தனது வீட்டில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறார் கணேசமூர்த்தி. சல்பாஸ் மாத்திரை எனப்படுகிற உயிர்க்கொல்லி மாத்திரையை அவர் விழுங்கியது 10.30 மணிக்கு தெரியவந்தது. ஈரோடு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் பின்னர் கோவையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெற்று வந்த கணேசமூர்த்தி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை தரப்பில் தகவல்கள் வெளியாகி உள்ளன. இன்று அதிகாலை 5.05 மணிக்கு திடீரென சிகிச்சையில் இருந்த அவருக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. கணேசமூர்த்தியின் உயிரிழப்பு காரணமாக மதிமுக கட்சியினர் மற்றும் கூட்டணிக் கட்சியினர் மருத்துவமனைக்கு வருகை தந்த வண்ணம் உள்ளனர்.

Next Story

‘டிஜிட்டல் இந்தியா’ - அதிர்ச்சி அனுபவத்தைப் பகிர்ந்த நடிகை

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
hina khan beggar incident

பாலிவுட்டில் தொலைக்காட்சி தொடர்களிலும், நிகழ்ச்சிகளிலும் மற்றும் ஆல்பம் வீடியோக்களிலும் நடித்து வருகிறவர் நடிகை ஹினா கான். மேலும் டேமேஜ்டு 2 வெப் சீரிஸிலும் நடித்துள்ளார். இவர் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் யாசகர் ஒருவரின் செயல் குறித்து பதிவிட்டிருந்தார். அது தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

அந்தப் பதிவில், “நான் சிக்னலில் கிரீன் சிக்னலுக்காக காத்துக் கொண்டிருந்தேன். அப்போது ஒரு நபர் என் கார் கதவை தட்டினார். கொஞ்சம் பணம் கொடுத்து உதவ முடியுமா என்று கேட்டார். என்னிடம் பணம் இல்லை என்றேன். வீட்டில் தம்பி, தங்கைகள் இருக்கிறார்கள். தயவு செய்து ஏதாவது உதவுங்கள் என்றார். நான் மீண்டும் என்னிடம் பணம் இல்லை. ஸாரி என்றேன். கூகுள் பே இருக்கு மேடம். அந்த நம்பர் தருகிறேன் என்றார். அது எனக்கு அதிர்ச்சியளித்தது. 

பின்பு அவருக்கு கூகுள் பே மூலம் பணம் அனுப்ப முயற்சிக்கும் போது, ஒரு வாரத்துக்கான ரேஷன் பொருட்கள் வாங்க பணம் அனுப்புங்க மேடம் என்றார். இது என்னை மேலும் அதிர்ச்சியாக்கியது. டிஜிட்டல் இந்தியா தற்போது சிறந்ததாக இருக்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.