Legendary playback singer Vani Jayaram passes away

Advertisment

பழம்பெரும் பின்னணி பாடகி வாணி ஜெயராம்(78) காலமானார். 1971 ஆம் ஆண்டு திரைத்துறையில் அறிமுகமான இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட 19 மொழிகளில் கிட்டத்தட்ட 10,000க்கும் அதிகமான பாடல்களைப் பாடியுள்ளார். சிறந்த பாடகிக்கான தேசிய விருதையும் பல்வேறு மாநில அரசுகள் விருதுகளையும் வாங்கியுள்ளார். திரைத்துறையில் இவர் ஆற்றிய பணிகளைப் பாராட்டி சமீபத்தில் மத்திய அரசு பத்மபூஷன் விருது அறிவித்தது.

இந்த நிலையில், சென்னை நுங்கம்பாக்கத்தில் வசித்து வந்த வாணி ஜெயராம் அவரது இல்லத்தில்நெற்றியில் காயங்களுடன் இறந்து கிடந்ததாகச் சொல்லப்படுகிறது. இதுகுறித்து ஆயிரம் விளக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இவரது மறைவு திரையுலகினரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இது தொடர்பாக ரசிகர்களும் திரைப் பிரபலங்களும் தற்போது இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.