ஆந்திராவைச் சேர்ந்த பழம்பெரும் நடிகர் சந்திரமோகன். தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நடித்து புகழ் பெற்றவர். தமிழில் வெளியான எம்.ஜி.ஆர் நடித்த ‘நாளை நமதே’ திரைப்படத்தில் எம்ஜிஆருக்கு தம்பியாக நடித்தவர். பிலிம் பேர் விருது, நந்தி விருது போன்ற விருதுகளைப் பெற்றவர். கிட்டத்தட்ட 942 படங்கள் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
வயதுமூப்பின் காரணமாக ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ரசிகர்களின் அஞ்சலிக்குப் பிறகு அவரது இறுதிச் சடங்கு நடைபெற உள்ளது.