Skip to main content

'தி லெஜண்ட்' படக்குழுவின் வியூகத்திற்கு கிடைத்த கைமேல் பலன் - பிரபல விநியோகஸ்தரின் வியாபார கணிப்பு 

Published on 21/07/2022 | Edited on 21/07/2022

 

The Legend

 

லெஜண்ட் சரவணன் முதன்முறையாக தயாரித்து, நாயகனாக அறிமுகமாகும் 'தி லெஜண்ட்' திரைப்படம், ஜேடி-ஜெர்ரி இயக்கத்தில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் மிக பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது. இப்படம்  ஜூலை 28ஆம் தேதி ஐந்து மொழிகளில் 2500க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகிறது.

 

இப்படத்தின் டிரைலர், 'மொசலோ மொசலு' பாடல், 'வாடிவாசல்' பாடல் ஆகியவை பல மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ள நிலையில், சமீபத்தில் வெளியான 'பொ பொ பொ' பாடல் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. எமோஷன், ஆக்‌ஷன், காதல், காமெடி என அனைத்தையும் ஒரு சேரக் கலந்து அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில் இப்படத்தை படக்குழு உருவாக்கியுள்ளது.

 

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் நடித்த பல வெற்றிப்படங்களை தமிழகம் முழுவதும் விநியோகம் செய்துவரும் கோபுரம் சினிமாஸ் அன்புச்செழியன் 'தி லெஜண்ட்' படத்தை பார்த்து, “என் கணிப்பின்படி முதல் படத்திலேயே உச்ச நட்சத்திரங்கள் வரிசையில் லெஜண்ட் சரவணன் இணைகிறார்" என்று பாராட்டி, நிச்சயம் இப்படம் மாபெரும் வெற்றி பெறும் எனக் கூறி அதிக முன்பணம் கொடுத்து தமிழக திரையரங்க உரிமையைப் பெற்றிருக்கிறார்.மேலும், தமிழகத்தில் மட்டும் 800க்கும் அதிகமான திரையரங்குகளில் 'தி லெஜண்ட்' திரைப்படத்தை அவர் வெளியிட உள்ளார்.

 

அனைத்து மொழிகளிலும் முன்னணி விநியோகஸ்தர் மூலம் படத்தை வெளியிட திட்டமிட்டு அதற்கேற்ப வியாபார வியூகத்தை 'தி லெஜண்ட்' படக்குழு வகுத்திருந்த நிலையில், அதற்கு கைமேல் பலன் கிடைத்துள்ளதாம். அதோடு, முதல் படத்திலேயே அதிக பணம் கொடுத்து பெறப்பட்ட படம், உலகமெங்கும் 2500க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகும் படம் என்கிற பெருமை லெஜண்ட் சரவணனுக்கு கிடைத்திருக்கிறதாம்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

லெஜண்டுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த ரசிகர்கள்

Published on 26/05/2023 | Edited on 26/05/2023

 

legend saravana new video viral

 

சரவணா ஸ்டோர் குழுமத்தின் உரிமையாளரான சரவணன் அருள் கடந்த ஆண்டு வெளியான தி லெஜண்ட் படத்தின் மூலம் வெள்ளித்திரையில் கதாநாயகனாக அறிமுகமாகியிருந்தார். இப்படத்தை ஜே.டி - ஜெரி இயக்க பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியானது. உலகம் முழுவதும் ரூ. 45 கோடி வசூல் செய்தது.  

 

பின்பு ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் கடந்த மாதம் வெளியானது. அதில் ஸ்ட்ரீமிங்கில் நம்பர் 1 இடத்தை பிடித்ததாக படக்குழு தெரிவித்திருந்தது. இதையடுத்து லெஜண்ட் சரவணனின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக இருப்பதாக முணுமுணுக்கப்படுகிறது. 

 

இதனிடையே சரவணன் அருள் தனது சமூக வலைதள பக்கத்தில் சமீபத்தில் புது கெட்டப்புடன் வெளியிட்ட புகைப்படம் வைரலானது. அதில் தாடி வைத்து இருந்தார். அதே கெட்டப்புடன் கடந்த மாதம் ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். அந்த வீடியோவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் தற்போது அதே கெட்டப்புடன் மாஸான லுக்கில் ரோல்ஸ்ராய்ஸ் காரில் திருமண நிகழ்ச்சிக்கு வருகை தந்துள்ளார். அவரை பார்த்த பலரும் அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, "அன்பான ரசிகர்களுடன்" என பதிவிட்டுள்ளார்.

 

 

 

 

Next Story

புது கெட்டப்புடன் ரோல்ஸ் ராய்ஸில் என்ட்ரி கொடுத்த லெஜண்ட் சரவணன்

Published on 24/04/2023 | Edited on 24/04/2023

 

legend saravanan rolls royce entry

 

சரவணா ஸ்டோர் குழுமத்தின் உரிமையாளரான சரவணன் அருள் கடந்த ஆண்டு வெளியான தி லெஜண்ட் படத்தின் மூலம் வெள்ளித்திரையில் கதாநாயகனாக அறிமுகமாகியிருந்தார். இப்படத்தை ஜே.டி - ஜெரி இயக்க பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியானது. உலகம் முழுவதும் ரூ. 45 கோடி வசூல் செய்தது.  

 

பின்பு ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் கடந்த மாதம் வெளியானது. அதில் ஸ்ட்ரீமிங்கில் நம்பர் 1 இடத்தை பிடித்ததாக படக்குழு தெரிவித்திருந்தது. இதையடுத்து லெஜண்ட் சரவணனின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக இருப்பதாக முணுமுணுக்கப்படுகிறது. 

 

இதனிடையே தனது சமூக வலைதள பக்கத்தில் கடந்த மாதம் வெளியிட்ட புகைப்படம் வைரலானது. அதில் புது கெட்டப்புடன் தாடி வைத்து இருந்தார். இந்த நிலையில் அதே கெட்டப்புடன் மாஸான லுக்கில் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். அதில் ஒரு திருமண நிகழ்ச்சியில் ரோல்ஸ் ராய்ஸ் காரில் வருகை தருகிறார். பின்பு மணமேடைக்கு சென்று மணமக்களை வாழ்த்துகிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.