/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/61_39.jpg)
லெஜண்ட் சரவணன் முதன்முறையாக தயாரித்து, நாயகனாக அறிமுகமாகும் 'தி லெஜண்ட்' திரைப்படம், ஜேடி-ஜெர்ரி இயக்கத்தில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் மிக பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது. இப்படம் ஜூலை 28ஆம் தேதி ஐந்து மொழிகளில் 2500க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகிறது.
இப்படத்தின் டிரைலர், 'மொசலோ மொசலு' பாடல், 'வாடிவாசல்' பாடல் ஆகியவை பல மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ள நிலையில், சமீபத்தில் வெளியான 'பொ பொ பொ' பாடல் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. எமோஷன், ஆக்ஷன், காதல், காமெடி என அனைத்தையும் ஒரு சேரக் கலந்து அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில் இப்படத்தை படக்குழு உருவாக்கியுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் நடித்த பல வெற்றிப்படங்களை தமிழகம் முழுவதும் விநியோகம் செய்துவரும் கோபுரம் சினிமாஸ் அன்புச்செழியன் 'தி லெஜண்ட்' படத்தை பார்த்து, “என் கணிப்பின்படி முதல் படத்திலேயே உச்ச நட்சத்திரங்கள் வரிசையில் லெஜண்ட் சரவணன் இணைகிறார்" என்று பாராட்டி, நிச்சயம் இப்படம் மாபெரும் வெற்றி பெறும் எனக் கூறி அதிக முன்பணம் கொடுத்து தமிழக திரையரங்க உரிமையைப் பெற்றிருக்கிறார்.மேலும், தமிழகத்தில் மட்டும் 800க்கும் அதிகமான திரையரங்குகளில் 'தி லெஜண்ட்' திரைப்படத்தை அவர் வெளியிட உள்ளார்.
அனைத்து மொழிகளிலும் முன்னணி விநியோகஸ்தர் மூலம் படத்தை வெளியிட திட்டமிட்டு அதற்கேற்ப வியாபார வியூகத்தை 'தி லெஜண்ட்' படக்குழு வகுத்திருந்த நிலையில், அதற்கு கைமேல் பலன் கிடைத்துள்ளதாம். அதோடு, முதல் படத்திலேயே அதிக பணம் கொடுத்து பெறப்பட்ட படம், உலகமெங்கும் 2500க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகும் படம் என்கிற பெருமை லெஜண்ட் சரவணனுக்கு கிடைத்திருக்கிறதாம்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)