Published on 25/07/2022 | Edited on 25/07/2022

சரவணா ஸ்டோர் குழுமத்தின் உரிமையாளரின் மகனான சரவணன் அருள் கதாநாயகனாக அறிமுகமாகவுள்ள திரைப்படம் 'தி லெஜண்ட்'. இப்படத்தை ஜே.டி - ஜெரி ஆகியோர் இயக்குகின்றனர். இப்படத்தில் சரவணன் அருளுக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி ராவ்டேலா நடிக்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கும் இப்படத்தில் விவேக், பிரபு, யோகிபாபு, நாசர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் வரும் 28 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இதனையொட்டி படக்குழு படத்தின் சிறு முன்னோட்டமாக தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் படக்குழு ட்ரைலரை வெளியிட்டு வருகிறது. அந்த ட்ரைலர் பிறமொழி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் தி லெஜண்ட் படத்தின் மலையாள தீம் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.