Advertisment

பரபரப்பாக ஆரம்பிக்கப்பட்ட லெஜண்ட் சரவணனின் புதிய படம்!

Legend Saravan's new film started

Advertisment

சரவணா ஸ்டோர் குழுமத்தின் உரிமையாளரான சரவணன் அருள் கடந்த 2022ஆம் ஆண்டு வெளியான தி லெஜண்ட் படத்தின் மூலம் வெள்ளித்திரையில் கதாநாயகனாக அறிமுகமாகியிருந்தார். இப்படத்தை ஜே.டி - ஜெரி இயக்க பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியானது. உலகம் முழுவதும் ரூ. 45 கோடி வசூல் செய்தது. இதையடுத்து லெஜண்ட் சரவணனின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக இருப்பதாக பேச்சுகள் இருந்து வந்தது.

இதனிடையே எதிர்நீச்சல், கொடி, கருடன் போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் துரை செந்தில் குமார் இயக்கும் புது படத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியானது. அந்த வகையில், கடந்த ஜனவரி மாதம் புது கெட்டப்புடன் இருக்கும் சில புகைப்படங்களை லெஜண்ட் சரவணன், அவரது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து அடுத்த படம் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனக்குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில், இயக்குநர் துரை செந்தில் குமார் மற்றும் லெஜண்ட் சரவணன் கூட்டணியில் உருவாகவிருக்கும் புதிய படத்தை உறுதி செய்யும் வகையில் அந்தப் படத்தின் அப்டேட் இன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில், பெயரிடபடாத இந்தப் படத்தின் போட்டோ ஷூட் இன்று தொடங்கியுள்ளது. இது தொடர்பான புகைப்படத்தை லெஜண்ட் சரவணன் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து ‘New game started’ என்ற ஹேஷ்டேக்கை இணைத்துள்ளார். மேலும், இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.

Advertisment

legend saravana
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe