Advertisment

”மக்களுக்கு மனமார்ந்த நன்றி” - லெஜண்ட் சரவணன் ட்வீட்

The Legend

சரவணா ஸ்டோர் குழுமத்தின் உரிமையாளரின் மகனான சரவணன் அருள் சமீபத்தில் வெளியான தி லெஜண்ட் படத்தின் மூலம் வெள்ளித்திரையில் கதாநாயகனாக அறிமுகமாகியிருந்தார். இப்படத்தை ஜே.டி - ஜெரி இயக்கியிருந்தனர். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் உலக அளவில் ரூ. 45 கோடி வசூல் செய்தது. தி லெஜண்ட் படத்தின் சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமையைக் கைப்பற்ற இரு முன்னணி நிறுவனங்கள் ஆர்வம் காட்டிவருவதாகக் கூறப்படுகிறது.

Advertisment

இந்த நிலையில், தி லெஜண்ட் படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்து சரவணன் அருள் ட்வீட் செய்துள்ளார். அப்பதிவில், வெற்றி நாயகனாக்கிய மக்களுக்கு மனமார்ந்த நன்றி எனக் குறிப்பிட்டுள்ளார். அவர் நடிப்பு குறித்து சில நெகட்டிவ் விமர்சனங்கள் வந்தாலும் அடுத்தடுத்த படங்களில் அதைச் சரிசெய்து, தொடர்ந்து நடிக்கும் முடிவில் உறுதியாக இருக்கிறாராம் லெஜண்ட் சரவணன்.

Advertisment

the legend
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe