/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/08_15.jpg)
சரவணா ஸ்டோர் குழுமத்தின் உரிமையாளரின் மகனான சரவணன் அருள் தற்போது நடிப்பில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். முதலில் தனது நிறுவனம் தொடர்பான விளம்பரப் படங்களில் நடித்து வந்த லெஜண்ட் சரவணன், 'தி லெஜண்ட்' படத்தின் மூலம் வெள்ளித்திரையில் கதாநாயகனாக அறிமுகமானார். இப்படம் கடந்த ஜூலை மாதம் வெளியானது.
இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற லெஜண்ட் சரவணன், பின்பு செய்தியாளர்களைச் சந்தித்து அவர்களின் கேள்விகளுக்குப் பதில் அளித்துள்ளார். அவர் பேசுகையில், "ஒரு புதிய படத்துக்காக ரெடியாகி வருகிறேன். அந்தப் படத்தின் இயக்குநர் உள்ளிட்ட அப்டேட்டுகளை கூடிய விரைவில் அறிவிப்பேன். அரசியல் வருகை என்பது அந்த மக்களும் மகேசனும் தான் முடிவு செய்யவேண்டும். அரசியலில் மக்களின் சிந்தனை மற்றும் எண்ணங்கள் ரொம்ப வேகமாகச் செயல்பட்டு வருகிறது. மக்கள் கூப்பிட்டால் வருவேன்" எனப் பேசியுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)