legend saravanan rolls royce entry

Advertisment

சரவணா ஸ்டோர்குழுமத்தின் உரிமையாளரான சரவணன் அருள் கடந்த ஆண்டு வெளியான தி லெஜண்ட் படத்தின் மூலம் வெள்ளித்திரையில் கதாநாயகனாக அறிமுகமாகியிருந்தார். இப்படத்தை ஜே.டி - ஜெரி இயக்க பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியானது. உலகம் முழுவதும் ரூ. 45 கோடி வசூல் செய்தது.

பின்பு ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் கடந்த மாதம் வெளியானது. அதில் ஸ்ட்ரீமிங்கில் நம்பர் 1 இடத்தை பிடித்ததாக படக்குழு தெரிவித்திருந்தது. இதையடுத்து லெஜண்ட் சரவணனின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக இருப்பதாக முணுமுணுக்கப்படுகிறது.

இதனிடையே தனது சமூக வலைதள பக்கத்தில் கடந்த மாதம் வெளியிட்ட புகைப்படம் வைரலானது. அதில் புது கெட்டப்புடன் தாடி வைத்து இருந்தார். இந்த நிலையில் அதே கெட்டப்புடன் மாஸான லுக்கில் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். அதில் ஒரு திருமண நிகழ்ச்சியில் ரோல்ஸ் ராய்ஸ் காரில் வருகை தருகிறார். பின்பு மணமேடைக்கு சென்று மணமக்களை வாழ்த்துகிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisment