legend saravanan next film update

சரவணா ஸ்டோர் குழுமத்தின் உரிமையாளரான சரவணன் அருள் கடந்த ஆண்டு வெளியான தி லெஜண்ட் படத்தின் மூலம் வெள்ளித்திரையில் கதாநாயகனாக அறிமுகமாகியிருந்தார். இப்படத்தை ஜே.டி - ஜெரி இயக்க பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியானது. உலகம் முழுவதும் ரூ. 45 கோடி வசூல் செய்தது. இதையடுத்து லெஜண்ட் சரவணனின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக இருப்பதாக பேச்சுகள் இருந்து வருகிறது.

Advertisment

இதனிடையே சமீபத்தில் லெஜண்ட் சரவணன், துரை செந்தில் குமார் இயக்கும் புது படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் லெஜண்ட் சரவணன் அவரது எக்ஸ் பக்கத்தில், புது கெட்டப்புடன் இருக்கும் சில புதுப்படங்களை பகிர்ந்து அடுத்த படம் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிவித்துள்ளார். மேலும் அன்பானவன் என்ற ஹேஷ்டேக்கையும் இணைத்து பணிகள் தொடங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார். அதனால் விரைவில் அப்டேட் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisment