legend saravanan next with durai senthilkumar

சரவணா ஸ்டோர் குழுமத்தின் உரிமையாளரான சரவணன் அருள் கடந்த ஆண்டு வெளியான தி லெஜண்ட் படத்தின் மூலம் வெள்ளித்திரையில் கதாநாயகனாக அறிமுகமாகியிருந்தார். இப்படத்தை ஜே.டி - ஜெரி இயக்க பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியானது. உலகம் முழுவதும் ரூ. 45 கோடி வசூல் செய்தது. இதையடுத்து லெஜண்ட் சரவணனின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக இருப்பதாக பேச்சுகள் இருந்து வருகிறது.

Advertisment

இந்த நிலையில் லெஜண்ட் சரவணா நடிக்கும் புதிய படத்தின் தகவல் வெளியாகியுள்ளது. துரை செந்தில் குமார் இயக்கத்தில் அவர் நடிக்க கமிட்டாகியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பிரம்மாண்டமாக எடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கோலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது.

Advertisment

துரை செந்தில் குமார், எதிர்நீச்சல், காக்கி சட்டை, கொடி, பட்டாஸ் உள்ளிட்ட படங்களை இயக்கியவர். மேலும் ராகாவா லாரன்ஸை வைத்து அதிகாரம் மற்றும் நயன்தாரவை வைத்து ஒரு படம் இயக்க கமிட்டானார். ஆனால் இந்த படங்களை பற்றிய அப்டேட் எதுவும் வரவில்லை. இப்போது சூரியை ஹீரோவாக வைத்து ஒரு படம் இயக்கி வருகிறார். லெஜண்ட் சரவணனுடன் இணைவது உறுதியாகும் பட்சத்தில் சூரி படத்தை முடித்துவிட்டு இப்படத்தை தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.