Advertisment

அண்ணாச்சியுடன் அண்ணாத்த - கவனம் ஈர்க்கும் புகைப்படம்

legend saravanan meets rajinikanth - photos goes viral on internet

சரவணா ஸ்டோர் குழுமத்தின் உரிமையாளரின் மகனான லெஜெண்ட் சரவணன் 'தி லெஜண்ட்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் இப்படம் கடந்த 28ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ஜே.டி - ஜெரி இயக்கியிருந்த இப்படத்தில் பாலிவுட் நடிகை ஊர்வசி ராவ்டேலா கதாநாயகியாக நடித்திருந்தார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.

Advertisment

இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் லெஜெண்ட் சரவணன் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். இப்பதிவில் "சூப்பர் ஸ்டாருடன் தருணங்கள்" என குறிப்பிட்டு ரஜினியுடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இப்புகைப்படம் எந்த நிகழ்வில் எடுத்தது பற்றிய தகவல் அவர் வெளியிடவில்லை. இருப்பினும் இப்புகைப்படம் சமூக வலைத்தளத்தில் பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது.

Advertisment

Actor Rajinikanth arul saravanan
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe