/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/283_7.jpg)
சரவணா ஸ்டோர் குழும உரிமையாளரின் மகனான சரவணன் அருள் கடந்த வருடம் வெளியான 'தி லெஜண்ட்' படம் மூலம் வெள்ளித்திரையில் கதாநாயகனாக அறிமுகமாகியிருந்தார். இப்படத்தை ஜே.டி - ஜெரி இயக்கியிருந்தனர். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் உலக அளவில் ரூ. 45 கோடி வசூல் செய்தது.
இப்படத்தை அடுத்து லெஜண்ட் சரவணன் நடிக்கும் புதிய படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனக் கூறியிருந்தார். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்காஷ்மீர் சென்றலெஜண்ட் சரவணன், அங்கிருந்து அவ்வப்போது புகைப்படம் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் தற்போது ஒரு புகைப்படத்தை பகிர்ந்து, "காத்திருப்பு நெருங்குகிறது. இன்னும் சில தேதிகளில் சுவாரஸ்யமான அறிவிப்பு வெளியாகும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
லெஜண்ட் சரவணன் இருக்கும் அதே காஷ்மீரில் தான் விஜய் நடித்து வரும் 'லியோ' படத்தின் படப்பிடிப்பும் நடந்து வருகிறது. அதனால் லியோ படத்தில் சரவணன் நடிக்கிறாரோ என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது. இந்தக் கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் இன்னும் சில தினங்களில் ஒரு அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)