Advertisment

'சரவெடி' - புதிய தளத்தில் லெஜண்ட் சரவணன்

 Legend Saravanan joined in twitter

Advertisment

சரவணா ஸ்டோர் குழுமத்தின் உரிமையாளரின் மகனான சரவணன் அருள் தற்போது நடிப்பில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். முதலில் தனது நிறுவனம் தொடர்பான விளம்பர படங்களில் நடித்து வந்த லெஜண்ட் சரவணன் அடுத்ததாக வெள்ளித்திரையில் கதாநாயகனாக அறிமுகமாகவுள்ள திரைப்படம் 'தி லெஜண்ட்'. இப்படத்தை ஜே.டி - ஜெரிஇயக்குகின்றனர். இப்படத்தில் சரவணன் அருளுக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி ராவ்டேலா நடிக்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கும் இப்படத்தில் விவேக், பிரபு, யோகிபாபு, நாசர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சமீபத்தில் இப்படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகின.

இந்நிலையில் லெஜண்ட் சரவணன் சமூக வலைதளத்தில் ஒன்றான ட்விட்டரில் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளார். ட்விட்டர் கணக்கை தொடங்கிய சில மணிநேரங்களிலேயேமூவாயிறத்து ஐநூறு-க்கும் (3,500) மேலான நபர்கள் அவரைப் பின் தொடர்ந்துள்ளனர். அதோடு அந்த ட்விட்டர் பக்கத்தில் 'சரவெடி ட்ரைலர்' எனக் குறிப்பிட்டு தனது படமான 'தி லெஜண்ட்' படத்தின் புதிய ட்ரைலரையும் பகிர்ந்துள்ளார் லெஜண்ட் சரவணன். இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் உலகம் முழுவதும் 2,500-க்கும் அதிகமான திரையரங்குகளில் வரும் 28 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

the legend twitter
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe