‘தி லெஜண்ட்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் லெஜண்ட் சரவணன். அதைத் தொடர்ந்து துரை செந்தில்குமார் இயக்கத்தில் பெயரிடப்படாத படம் ஒன்றில் நடித்து வருகிறார். அவரே தயாரித்தும் வரும் நிலையில் இப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகையான பாயல் ராஜ்புத் நாயகியாக நடிக்கிறார். ஷாம், ஆண்ட்ரியா ஜெரிமியா, 'பாகுபலி' பிரபாகர், சந்தோஷ் பிரதாப், 'லியோ' புகழ் பேபி இயல் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார்.
இப்படம் தூத்துக்குடியை மையமாக வைத்து ஒரு உண்மை சம்பவ அடிப்படையில் ஆக்ஷன் திரில்லராக உருவாகிற்து. இப்படம் தீபாவளிக்கு வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இப்படம் குறித்து முன்னதாக பேசிய லெஜண்ட் சரவணன், இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில் என அனைத்து சுவாரசிய அம்சங்களும் இருக்கும் எனவும் டைட்டிலும் மாஸாக இருக்கும் எனவும் கூறியிருந்தார்.
இந்த நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது. இதனையொட்டி மாற்று திறனாலிகளுக்கு லெஜண்ட் சரவணன் நலத்திட்ட உதவிகள் வழங்கியுள்ளார். இது தொடர்பான வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ளார். அதில் படத்தின் இசை வெளியீட்டு விழா விரைவில் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/09/04/400-2025-09-04-18-45-26.jpg)