Advertisment

குழந்தைகளுடன் சுதந்திர தினம் கொண்டாட்டம்; அடுத்த படம் குறித்த அப்டேட் சொன்ன லெஜண்ட் சரவணன்

 Legend Saravanan celebrated Independence Day with children

சரவணா ஸ்டோர் குழுமத்தின் உரிமையாளரான சரவணன் அருள் கடந்த ஆண்டு வெளியான ‘தி லெஜண்ட்’ படத்தின் மூலம் வெள்ளித்திரையில் கதாநாயகனாக அறிமுகமாகியிருந்தார். இப்படத்தை ஜே.டி - ஜெரி இயக்க பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியானது. உலகம் முழுவதும் ரூ. 45 கோடி வசூல் செய்தது.

Advertisment

பின்பு ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியானது. அதில் ஸ்ட்ரீமிங்கில் நம்பர் 1 இடத்தை பிடித்ததாக படக்குழு தெரிவித்திருந்தது. இதையடுத்து லெஜண்ட் சரவணனின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக இருப்பதாக முணுமுணுக்கப்படுகிறது.

Advertisment

l

சரவணன் அருள் தனது சமூக வலைதள பக்கத்தில் சமீபத்தில் புது கெட்டப்புடன் வெளியிட்ட புகைப்படம் வைரலானது. அதில் தாடி வைத்து இருந்தார். இந்நிலையில் குழந்தைகளுடன் சுதந்திர தினத்தை கொண்டாடி மகிழ்ந்துள்ளார். இந்நிகழ்வில் குழந்தைகளுக்கு பரிசுப் பொருட்கள் வழங்கியபோது ஒரு குழந்தை உங்களது அடுத்த படம் எப்போது என்ற கேள்வியை எழுப்பியது. அதற்கு பதில் அளித்த லெஜெண்ட் சரவணன் அருள் “ஒரு படத்தில் புக் ஆகி உள்ளேன், விரைவில் அது குறித்த தகவல்கள் வெளியிடப்படும்” என்ற செய்தியை சொன்னார்.குழந்தைகளுடன் சுதந்திர தினம் கொண்டாடியபடங்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

legend saravana
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe