the legend saravanan ayudha pooja celebration

Advertisment

ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி பண்டிகை வழக்கம் போல் வெகு விமரிசையாக மக்களால் கொண்டாடப்பட்டது. அரசியல் தலைவர்கள் முதல் திரை பிரபலங்கள் வரை பலரும் கொண்டாடி மகிழ்ந்தனர்.

இந்த நிலையில் சரவணா ஸ்டோர் குழுமத்தின் உரிமையாளரும் நடிகருமான சரவணன் அருள், ஆட்டோ ஓட்டுநர்களுடன் ஆயுத பூஜையை கொண்டாடியுள்ளார். மேலும் அவர்களுக்கு பரிசு வழங்கி மகிழ்ந்தார். பின்பு அவரை ஆட்டோ ஓட்ட சொல்லி கோரிக்கை எழுந்த நிலையில் அதை ஏற்று ஆட்டோ ஒட்டினார். அவருடன் அங்கிருந்தவர்கள் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது.

சரவணன், கடந்த ஆண்டு வெளியான தி லெஜண்ட் படத்தின் மூலம் வெள்ளித்திரையில் கதாநாயகனாக அறிமுகமாகியிருந்தார். இப்படத்தை ஜே.டி - ஜெர்ரி இயக்க பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியானது. உலகம் முழுவதும் ரூ.45 கோடி வசூல் செய்தது. இதையடுத்து அவரின் அடுத்த பட அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.