/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/465_10.jpg)
‘தி லெஜண்ட்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் லெஜண்ட் சரவணன். அதைத் தொடர்ந்து துரை செந்தில்குமார் இயக்கத்தில் பெயரிடப்படாத படம் ஒன்றில் நடிக்க கமிட்டாகி இருந்தார். அந்த படத்திற்காக போட்டோ ஷூட் செய்த புகைப்படங்களை தனது எக்ஸ் பக்கத்தில் கடந்த ஜூன் மாதம் பகிர்ந்திருந்தார்.
இந்த நிலையில் படத்தின் பணிகள் மீண்டும் தொடங்கியுள்ளது. இப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகையான பாயல் ராஜ்புத் நாயகியாக நடிக்கிறார். ஷாம், ஆண்ட்ரியா ஜெரிமியா, 'பாகுபலி' பிரபாகர், சந்தோஷ் பிரதாப், 'லியோ' புகழ் பேபி இயல் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். இந்த திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நிறைவடைந்த நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தூத்துக்குடி அருகே உள்ள லெஜெண்ட் சரவணனின் சொந்த ஊரான பணிக்க நாடார் குடியிருப்பில் தற்போது தொடங்கி அதன் சுற்றுப்புறங்களில் தொடர்ந்து நடைபெறுகிறது.
தூத்துக்குடியை மையமாக வைத்து உண்மை சம்பவம் ஒன்றின் அடிப்படையில் ஆக்ஷன் திரில்லராக இந்த படத்தை அவர் இயக்கி வருகிறார். அடுத்த கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியா நாட்டிலும், மும்பை, டில்லி உள்ளிட்ட நகரங்களிலும் நடைபெற உள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)