/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/69_48.jpg)
சரவணா ஸ்டோர் குழுமத்தின் உரிமையாளரான சரவணன் அருள் கடந்த 2022ஆம் ஆண்டு வெளியான தி லெஜண்ட் படத்தின் மூலம் வெள்ளித்திரையில் கதாநாயகனாக அறிமுகமாகியிருந்தார். இப்படத்தை ஜே.டி - ஜெரி இயக்க பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியானது. உலகம் முழுவதும் ரூ. 45 கோடி வசூல் செய்தது. இதையடுத்து லெஜண்ட் சரவணனின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக இருப்பதாக பேச்சுகள் இருந்து வருகிறது.
இதனிடையே சமீபத்தில் லெஜண்ட் சரவணன், துரை செந்தில் குமார் இயக்கும் புது படத்தில் நடிக்கவுள்ளதாகத்தகவல் வெளியானது. இதையடுத்து கடந்த மாதம் புது கெட்டப்புடன் இருக்கும் சில புதுப்படங்களை லெஜண்ட் சரவணன், அவரது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து அடுத்த படம் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என குறிப்பிட்டிருந்தார். மேலும் அன்பானவன் என்ற ஹேஷ்டேக்கையும் இணைத்து பணிகள் தொடங்கியுள்ளதாகத்தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் உறவினர் திருமண நிகழ்வில் கலந்து கொண்டுள்ளதாக எக்ஸ் தளத்தில் தெரிவித்த லெஜண்ட் சரவணன், ஏப்ரலில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ளார். மற்ற விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)