Skip to main content

லெஜண்டுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த ரசிகர்கள்

 

legend saravana new video viral

 

சரவணா ஸ்டோர் குழுமத்தின் உரிமையாளரான சரவணன் அருள் கடந்த ஆண்டு வெளியான தி லெஜண்ட் படத்தின் மூலம் வெள்ளித்திரையில் கதாநாயகனாக அறிமுகமாகியிருந்தார். இப்படத்தை ஜே.டி - ஜெரி இயக்க பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியானது. உலகம் முழுவதும் ரூ. 45 கோடி வசூல் செய்தது.  

 

பின்பு ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் கடந்த மாதம் வெளியானது. அதில் ஸ்ட்ரீமிங்கில் நம்பர் 1 இடத்தை பிடித்ததாக படக்குழு தெரிவித்திருந்தது. இதையடுத்து லெஜண்ட் சரவணனின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக இருப்பதாக முணுமுணுக்கப்படுகிறது. 

 

இதனிடையே சரவணன் அருள் தனது சமூக வலைதள பக்கத்தில் சமீபத்தில் புது கெட்டப்புடன் வெளியிட்ட புகைப்படம் வைரலானது. அதில் தாடி வைத்து இருந்தார். அதே கெட்டப்புடன் கடந்த மாதம் ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். அந்த வீடியோவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் தற்போது அதே கெட்டப்புடன் மாஸான லுக்கில் ரோல்ஸ்ராய்ஸ் காரில் திருமண நிகழ்ச்சிக்கு வருகை தந்துள்ளார். அவரை பார்த்த பலரும் அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, "அன்பான ரசிகர்களுடன்" என பதிவிட்டுள்ளார்.

 

 

 

 

மிஸ் பண்ணிடாதீங்க