Advertisment

ஓடிடியில் நம்பர் 1 - தி லெஜண்ட் சரவணன் அறிவிப்பு

the Legend movie storms Hotstar as No.1

சரவணா ஸ்டோர் குழுமத்தின் உரிமையாளரான சரவணன் அருள் சமீபத்தில் வெளியான தி லெஜண்ட் படத்தின் மூலம் வெள்ளித்திரையில் கதாநாயகனாக அறிமுகமாகியிருந்தார். இப்படத்தை ஜே.டி - ஜெரி இயக்கியிருந்தனர். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் உலக அளவில் ரூ. 45 கோடி வசூல் செய்தது.

Advertisment

தி லெஜண்ட் படத்தின் சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமையைக் கைப்பற்ற இரு முன்னணி நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருவதாகக் கூறப்பட்ட நிலையில் ஹாட்ஸ்டார் நிறுவனம் இப்படத்தை கைப்பற்றியது. நேற்று ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியான இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகி இருக்கிறது. இந்த நிலையில் ஹாட்ஸ்டார் ஸ்ட்ரீமிங்கில் தி லெஜண்ட் படம் நம்பர் 1 இடத்தை பிடித்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. அதற்கான போஸ்டரை லெஜெண்ட் சரவணன் அவரது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Advertisment

hotstar arul saravanan the legend
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe