Advertisment

தி லெஜண்ட் ரூ. 45 கோடி வசூல்; வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு

legend movie box office collection

Advertisment

சரவணா ஸ்டோர் குழுமத்தின் உரிமையாளரின் மகனான சரவணன் அருள் தற்போது நடிப்பில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். முதலில் தனது நிறுவனம் தொடர்பான விளம்பர படங்களில் நடித்து வந்த லெஜண்ட் சரவணன் சமீபத்தில் வெளியான தி லெஜண்ட் படத்தின் மூலம் வெள்ளித்திரையில் கதாநாயகனாக அறிமுகமானார். இப்படத்தை ஜே.டி - ஜெரி இயக்க, ஊர்வசி ராவ்டேலா, கீதிகா ஆகிய இருவரும் கதாநாயகிகளாக நடித்திருந்தனர். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் உலக அளவில் ரூ. 45 கோடி வசூல் செய்தது.

இந்த நிலையில் தி லெஜண்ட் படத்தின் சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமைக்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. மேலும் இதில் சாட்டிலைட் உரிமை ரூ. 20 கோடிக்கும், ஓடிடி உரிமம் ரூ. 25 கோடிக்கும் விற்கப்படலாம் எனத் தெரிகிறது. முதல் படம் கொடுத்த வெற்றியின் உற்சாகத்தில் அடுத்த பட வேலைகளில் ஈடுபட்டுள்ளாராம்.

arul saravanan the legend
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe