கமல் ஆடியோ லான்ச் நடத்திய அதே மேடையை புக் செய்த 'அண்ணாச்சி' - வெளியான புதிய அப்டேட்

'The Legend' movie audio launch date released

சரவணா ஸ்டோர் குழுமத்தின் உரிமையாளரின் மகனான சரவணன் அருள் கதாநாயகனாக அறிமுகமாகவுள்ள திரைப்படம் 'தி லெஜண்ட்'. இப்படத்தை ஜே.டி - ஜெரி ஆகியோர் இயக்குகின்றனர். சரவணன் அருளுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஊர்வசி ராவ்டேலா நடிக்கிறார். இப்படத்தின் மூலம் அவர் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கும் இப்படத்தில் விவேக், பிரபு, யோகிபாபு, நாசர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சமீபத்தில் வெளியான இப்படத்தின் 'மோசலோ மொசலு' பாடல் நல்ல வரவேற்பை பெற்றது. பிரான்சில் நடைபெற்று வரும் கேன்ஸ் திரைப்பட விழாவில் இப்படத்தின் போஸ்டர் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் 'தி லெஜண்ட்' படத்தின் இசை வெளியீடு குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன் படி மே 29-ஆம் தேதி சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் பிரம்மாண்டமாக நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. இசை வெளியீட்டிற்கு முன்பே இப்படத்தின் இரண்டாவது பாடலான 'வாடி வாசல்' மே 20-ஆம் தேதி வெளியாகவுள்ளது. சமீபத்தில் கமலின் 'விக்ரம்' படத்தின் இசை வெளியீட்டு விழாவும் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

arul saravanan the legend
இதையும் படியுங்கள்
Subscribe