Advertisment

"அவள் மரணத்தின் தெய்வம்" - ட்விட்டர் நடவடிக்கைக்கு லீனா மணிமேகலை காட்டம் 

leena manimekalai condemnation twitter

Advertisment

பிரபல எழுத்தாளரும், இயக்குநருமான லீனா மணிமேகலை 'காளி' என்ற பெயரில் ஆவணப்படம் ஒன்றை இயக்கியுள்ளார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியான நிலையில் தற்போது பெரும் சர்ச்சையைகிளப்பியுள்ளது. அந்த போஸ்டரில் இந்துக்களின் தெய்வமானகாளி வேடம் அணிந்த பெண் வாயில்சிகரெட்டுடன், கையில் எல்ஜிபிடிகொடியைபிடித்தவாறு இருக்கிறது. இது தற்போது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்த போஸ்டர் இந்து மதத்தை அவமதிப்பதாகவும், உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜகவினர் மற்றும் இந்துத்துவவாதிகள் இயக்குநர் மணிமேகலைக்கு எதிராக கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதனிடையே டெல்லி மற்றும் உத்தரப் பிரதேச போலீசார் இயக்குநர் லீனா மணிமேகலை மீது வழக்கு பதிவு செய்தனர்.

இந்நிலையில் இயக்குநர் லீனா மணிமேகலை தனது ட்விட்டரில் வெளியிட்டிருந்த காளி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரைட்விட்டர் நிறுவனம் நீக்கியுள்ளது.மத உணர்வை அவமதிக்கும் வகையில் இருப்பதாக எழுந்த புகாரின் அடிப்படையில் ட்விட்டர் நிறுவனம் இந்த பதிவை நீக்கி உள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள லீனா மணிமேகலை, "போஸ்டர் குறித்து வெறுப்பை கக்கிய 200000 பயனர்களின் பதிவை நீக்குமா ட்விட்டர் நிறுவனம்? ஒருபோதும் காளியை கொல்ல முடியாது, வன்கொடுமை செய்ய முடியாது, காளியை அழிக்கவே முடியாது, அவள் மரணத்தின் தெய்வம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

Advertisment

இதனிடையே திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மஹுவா மொய்த்ரா உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இயக்குநர் லீனா மணிமேகலைக்கு ஆதரவு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

kaali Leena Manimekalai twitter
இதையும் படியுங்கள்
Subscribe